சாலை பணிகளை உள்தணிக்கை குழு ஆய்வு


சாலை பணிகளை உள்தணிக்கை குழு ஆய்வு
x

திருவண்ணாமலையில் சாலை பணிகளை உள்தணிக்கை குழு ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு அலகு திருவண்ணாமலை வட்டம் மூலமாக செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து செங்கல்பட்டு கண்காணிப்பு பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டம்) தேவராஜ் தலைமையிலான உள் தணிக்கை குழுவினர் கடந்த 17-ந் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

இக்குழுவினர் திருவண்ணாமலை கட்டுமான பணி அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து வேடந்தவாடி-துர்க்கம் சாலையில் போடப்பட்ட சாலை பணிகளை கள ஆய்வு செய்தனர்.

இக்குழுவினர் போளூர், செங்கம், தண்டராம்பட்டு உட்கோட்டங்களை சார்ந்த பணிகளையும் கள ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது வேலூர் நபார்டு கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சுந்தரமூர்த்தி, திருவண்ணாமலை கட்டுமானம் பராமரிப்பு பணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், திருவண்ணாமலை நபார்டு கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் ஸ்ரீதர், தண்டராம்பட்டு உதவி கோட்ட பொறியாளர் தியாகு, செங்கம் உதவி கோட்ட பொறியாளர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்தத் தணிக்கை குழுவினர் தங்களுடைய ஆய்வு அறிக்கையை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.


Next Story