சாலை மறியல்


சாலை மறியல்
x

நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

திருநாகேஸ்வரம் கடைவீதியில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் கும்பகோணம்- காரைக்கால் சாலையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்புகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 இடங்களில் அளவுகள் குறிக்கப்பட்டு முறையில்லாமல் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படுவதாக அப்பகுதி மக்களும், வர்த்தக சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று 3 அளவுகள் குறிக்கப்பட்டு முறையில்லாமல் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து திருநாகேஸ்வரம் கடைவீதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநீலக்குடி போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் தொலைபேசியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்பு கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசியபிறகு ஆக்கிரமிப்பு எடுக்கும் பணி தொடங்கும். அதுவரை நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story