சாலைமறியல் போராட்டம்


சாலைமறியல் போராட்டம்
x

எ.கல்லுப்பட்டி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே எ.கல்லுப்பட்டி கிராமத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வருவாய்த்துறை மூலம் நத்தம் புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எ.கல்லுப்பட்டி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story