சாலையோர கடை நடத்த அனுமதிக்க வேண்டும்


சாலையோர கடை நடத்த அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் சாலையோர கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம், மாற்றுத்திறனாளி மனு அளித்தார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றி சாலையை அகலப்படுத்தப்பட்டது. சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதி அருகில் கடைநடத்தி வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தான் கடை நடத்தி வந்த இடத்தில் எந்த ஒரு போக்குவரத்து பாதிப்பும் இல்லை. எனவே அந்த இடத்தில் மீண்டும் கடை நடத்தி கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுக்க நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். தனது அலுவலக அறையில் இருந்து மாற்றுத்திறனாளி மனு கொடுக்க வந்ததை பார்த்த நகராட்சி ஆணையாளர் பாலு நேரடியாக அவர் இருந்த இடத்திற்கே சென்று மனுவை பெற்று கொண்டார்.

பின்னர் நெடுஞ்சாலை துறையினர் இன்னும் சாலை பராமரிப்பு பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. பணிகள் முழுமையாக முடிந்தவுடன் எவ்வளவு இடம் போக்குவரத்து இடையூறு இல்லாமல் கிடைக்கும் என்பதை பொறுத்து கடை நடத்தி கொள்ள இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும் என்று ஆணையாளர் பாலு, அந்த மாற்றுத்திறனாளிக்கு பதிலளித்தார்.

1 More update

Next Story