போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடு, ஆடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிவதாகவும், அவற்றால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் கமிஷனர் அசோக்குமாருக்கு புகார்கள் சென்றன.
அவரது உத்தரவின்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 5 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர். மாட்டின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






