சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டது


சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டது
x

மேலப்பாளையம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் ஏராளமான இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுரைப்படி மாநகரப் பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த திங்கட்கிழமை 50 நாய்கள் பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உள்ள குறிச்சி, சொக்கநாதர் கோவில் தெரு, பாரதியார்புரம், நடராஜபுரம், அல் அமீன் நகர், ஹாமின்புரம், அமுதா பிட் நகர், கரீம் நகர், அல் அமீத் நகர், சந்தை ரோடு ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், முருகன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை வலைவீசி பிடித்தனர்.

மேலப்பாளையம் பகுதியில் நேற்று 28-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர். நாய்கள் பிடிக்கும் பணி மாநகர பகுதியில் தொடந்து நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story