வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகிறார்கள்.
நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கார் விற்ற பணம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது55). இவர் தனக்கு சொந்தமான காரை விற்பனை செய்தார். இதன் மூலம் கிடைத்த தொகை ரூ.3 லட்சத்தை வீட்டு பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, கடந்த 2-ந் ேததி மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.
4-ந் தேதி அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வாசல் கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.