நிதி நிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகைகள்-ரூ.5 லட்சம் கொள்ளை


நிதி நிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகைகள்-ரூ.5 லட்சம் கொள்ளை
x

தஞ்சையில், நிதி நிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சையில், நிதி நிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நிதி நிறுவன அதிபர்

தஞ்சை பூக்கார 1-ம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்ற கோபாலகிருஷ்ணன்(வயது 36). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை இவருடைய வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.

50 பவுன் நகைகள்-ரூ.5 லட்சம் கொள்ளை

மேலும் பீரோவில் வைத்து இருந்த 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம், 300 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

மேலும் மர்ம நபர்கள், அருகில் உள்ள மகேஸ்வரி என்பவரின் வீட்டிலும் பீரோவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தையும் திருடி ெசன்றனர். தனியாக வசித்து வந்த மகேஸ்வரி, வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது கொள்ளை சம்பவங்கள் குறித்து தஞ்சை நகர தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இது குறித்து தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு நகை-பணத்த்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story