ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகைகள்- ரூ.70 ஆயிரம் கொள்ளை


ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகைகள்- ரூ.70 ஆயிரம் கொள்ளை
x

ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகைகள்- ரூ.70 ஆயிரம் கொள்ளை போனது.

தஞ்சாவூர்

திருவையாறு அருகே மணக்கரம்பை தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார் (வயது49). கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உதயா (37). இவர் திருவையாறு அருகே திருப்பழனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் ஆசிரியை உதயா பள்ளிக்கு சென்று விட்டார். பாலகுமார், வேலை விஷயமாக திருவாலம்பொழில் சென்று விட்டார். நேற்று மாலை உதயா பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்புறக்கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. வீட்டிலிருந்த பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவிலிருந்த ரூ.70 ஆயிரம், 15 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், அசோக், பாலா மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர் கார்த்திகேயன் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டார். மோப்ப நாய் மூலமாகவும் துப்பு துலக்கப்பட்டது. இதுகுறித்து நடுக்காவேரி போலீசில் பாலகுமார் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story