கொத்தனாரிடம் வழிப்பறி
முத்துப்பேட்டையில் கொத்தனாரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது
திருவாரூர்
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த மருதங்காவெளி பகுதியில் ஒருவீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பூங்கொல்லை பகுதியை சேர்ந்த மாதவன் மகன் பாஸ்கர்(வயது28) ஈடுபட்டார். சம்பவத்தன்று மதியம் இவா் சித்தேரிகுளம் அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது பாஸ்கரை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பாஸ்கரிடம் இருந்த ரூ.200-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஸ்கர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாா். இதன்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள வங்கி ஊழியா் காலனி பகுதியை சேர்ந்த மகிமை தாஸ் மகன் வெர்கிஸ் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story