1 கிலோ தங்கம்-வெள்ளி பொருட்கள் கொள்ளை


1 கிலோ தங்கம்-வெள்ளி பொருட்கள் கொள்ளை
x

திருச்சியில் 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

திருச்சியில் 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகைபட்டறை

திருச்சி பெரியகடை வீதி அருகே சவுந்தரபாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் தனது வீட்டின் அருகே நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வேலை முடிந்ததும் நகை பட்டறையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பட்டறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதியினர் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்கு வந்து பார்த்தபோது, பட்டறையில் இருந்த இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.

122 பவுன் நகை கொள்ளை

மேலும் அதில் இருந்த 122 பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, இன்ஸ்பெக்டர் சுலக்சனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

மோப்பநாய் சிட்டி கொள்ளை நடந்த இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story