மூதாட்டியை கொன்று நகை கொள்ளை


மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
x

சூலூரில் கை, கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

சூலூரில் கை, கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியாக வசித்த மூதாட்டி

கோவையை அடுத்த சூலூர் சிந்தாமணிபுதூரை சேர்ந்தவர் சரோஜினி (வயது82). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சரோஜினியின் கணவர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சரோஜினி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், நேற்று மதியம் 12 மணியளவில் செல்வலட்சுமிபுரத்தில் வசிக்கும் சரோஜி னியின் மூத்த மகன் ரவிச்சந்திரனுக்கு (56) செல்போனில் பேசினார்.

பிணமாக கிடந்தார்

அவர், உங்கள் அம்மா காலையில் இருந்து வீட்டிற்கு வெளியே வர வில்லை. பால் பாக்கெட் இன்னும் எடுக்கப்படாமல் உள்ள தாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், உடனடியாக தனது தாய் சரோஜினியின் வீட்டிற்கு வந்தார்.

அவர் உள்ளே சென்று பார்த்த போது சரோஜினியின் கைகள், கால்கள், வாய் ஆகியவை பிளாஸ்டிக் டேப்பால் சுற்றி கட்டியது போல் ஒட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் அருகில் சென்று பார்த்த போது சரோஜினி பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதனால் அவர் கதறி அழுதார்.

நகை கொள்ளை

இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சரோஜினியை மர்ம நபர்கள் கை, கால், வாயை பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டி கொலை செய்து விட்டு அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, விரலில் அணிந்திருந்த மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.


இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story