உடன்குடியில் காரில் சென்றவரிடம் நூதன முறையில் ரூ.10 லட்சம் கொள்ளை


உடன்குடியில் காரில் சென்றவரிடம் நூதன முறையில் ரூ.10 லட்சம் கொள்ளை
x

தூத்துக்குடி அருகே காரில் சென்ற இரும்புகடை ஊழியரிடமிருந்து 10 லட்சம் கொள்ளை அடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது40). இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார். உடன்குடி தேரியூரில் உள்ள இரும்புக்கடையில் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு செந்தில்குமார் காரில் நேற்று மாலை தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

அவர் உடன்குடி-குலசேகரன்பட்டினம் சாலையில் சென்ற போது 2 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் காரை விதிமுறைகளை மீறி ஓட்டி செல்வதாக செந்தில்குமாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது காரின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த வசூல்பணம் ரூ. 10 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நூதனமுறையில் அவரது பணத்தை எடுத்து சென்றதை உணர்ந்த செந்தில்குமார் இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.


Next Story