வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த தம்பதியிடம் ரூ. 2 லட்சம் பறிப்பு
வங்கியில் பணம் எடுத்து வந்த தம்பதியிடம் ரூ.2 லட்சத்தை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கியில் பணம் எடுத்து வந்த தம்பதியிடம் ரூ.2 லட்சத்தை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.2 லட்சம்
சிவகங்கை செந்தமிழ்நகரை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது69). இவரது மனைவி ரஷ்யா பானு (63). நேற்று மதியம் கணவன்-மனைவி 2 பேரும் மதுரை ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அப்போது சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள ஒரு கடையில் ரஷ்யாபானு பொருட்கள் வாங்க இறங்கி உள்ளார் இந்த நிலையில் இவர்களை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், முகமது ரபீக்கின் முதுகில் பொடி ஒன்றை தூவி உள்ளனர். உடனே அவருக்கு எரிச்சலும் அரிப்பும் ஏற்பட்டதாம். இதனால் அவர் உடனடியாக இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கி நின்றுள்ளார். அப்போது அந்த 2 வாலிபர்களும் ரூ. 2 லட்சத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். முதியவர் சத்தம் போட அக்கம்பக்கத்தினர் திரள்வதற்குள் 2 வாலிபர்களும் தலைமறைவாகிகிட்டனர்.
கண்காணிப்பு
சிவகங்கையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் குற்றதடுப்பு பிரிவு போலீசார், அந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 2 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.