ராக்கதம்பட்டி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு


ராக்கதம்பட்டி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறப்பு
x

ராக்கதம்பட்டி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், ராக்கதம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மாமுண்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் செங்குட்டுவன், ஊர் முக்கியஸ்தர்கள் துரைராஜ், காந்தி, முருகேசன், ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், மக்கள் நல பணியாளர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த அலுவலகம் அமைவதற்கு பெரும் உதவி செய்த முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேச பிரபுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


Next Story