முதியவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த காதல் ஜோடி கைது
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டது. உல்லாச வாழ்க்கை நடத்த கைவரிசை காட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
வடவள்ளி
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டது. உல்லாச வாழ்க்கை நடத்த கைவரிசை காட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
குடிக்க தண்ணீர் கேட்டனர்
கோவையை அடுத்த வடவள்ளி அருகே பொம்மணாம்பாளை யம் மாரியம்மன்கோவில் வீதியில் குடியிருப்பவர் பெரிய ராயப் பன் (வயது80). இவருடைய மனைவி ராஜம்மாள் (67). இவர்களு டைய மகன் சென்னையில் கணினி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மகள் பெரிநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.
கணவருக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு மனைவி ராஜம்மாள் வெளியே சென்றார். இந்த நிலையில் பகல் 2 மணியளவில் ஒரு இளம்ஜோடி பெரிய ராயப்பன் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு உள்ளனர். அதை எடுப்பதற்காக அவர் வீட்டிற்குள் சென்றார்.
முதியவரை கட்டி போட்டனர்
உடனே அவரை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற இளம்ஜோடி திடீரென்று பெரியராயப்பனை தாக்கி மடக்கி பிடித்து 2 கைகளையும் கட்டி, வாயில் பிளாஸ்திரியை ஒட்டினர். பின்னர் அவரை சமையல் அறையில் தள்ளினர்.
இதையடுத்து அவர்கள் வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல இடங்களில் பணம், நகைகளை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்த 2 பவுன் நகை, ரூ.1500 -ஐ கொள்ளை அடித்து விட்டு அந்த இளம்ஜோடி வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேற முயன்றனர்.
பொதுமக்கள் பிடித்தனர்
இந்த நேரத்தில் பெரியராயப்பனின் மருமகள் சங்கீதா வீட்டுக்கு வந்தார். அவர், வீட்டின் பின் பகுதியில் இருந்து சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரிடம் நீங்கள் யார்? என்று விசாரித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தபடி தப்பி செல்ல முயன்றனர். இதன் காரணமாக சந்தேகம் அடைந்த சங்கீதா அவர்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து சங்கீதாவை தள்ளிவிட்டு தப்பி ஓடினர். உடனே சங்கீதா கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்களு டன் சேர்ந்து சங்கீதா, அந்த 2 பேரையும் தேடி சென்றார். அப்போது அங்குள்ள ஒரு புதரில் பதுங்கிய இளம்பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அதை பார்த்து அவருடன் வந்த வாலிபர் பொதுமக்களிடம் தானாக வந்து சரண் அடைந்தார்.
காதல் ஜோடி
உடனே அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் வடவள்ளி போலீ சில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள், விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திரா யிருப்பு பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி தினேஷ்குமார் (வயது 23), கோவை சிங்காநல்லூர் மாருதி நகரை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி செண்பகவள்ளி என்ற பிரியா (24) என்பதும் தெரிய வந்தது.
தினேஷ்குமார் சிங்காநல்லூரில் தங்கி வேலை பார்த்த வந்தார். அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் நேரில் சந்தித்து பழகி காதல் ஜோடிகளாக மாறினர். அதன்பிறகு அவர்கள், திருமணம் செய்யாமலேயே சிங்காநல்லூரில் அறை எடுத்து ஒன்றாக தங்கி இருந்துள்ளனர்.
கைது
அவர்கள் 2 பேரும் உல்லாசமாக வாழவும், பல இடங்களுக்கு சுற்றவும் பணம் தேவைப்பட்டதால் புறநகர் பகுதிகளில் தனியாக இருக்கும் முதியவர்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், நம்பர் பிளேட்டு கள், கத்தி, பிளாஸ்டிக் டேப்புகள், கயிறு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 4-ந்தேதி பாப்ப நாயக்கன்புதூர் முல்லைநகரில் வீட்டில் தனியாக இருந்த ராம கிருஷ்ணன் (80) என்பவரை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ.28 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த தும் இவர்கள்தான் என்பது தெரியவந்தது.
வீடுகளை நோட்டமிடுவோம்
கைதான காதல்ஜோடி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது :-
நாங்கள் ஜாலியாக வாழ பணம் தேவைப்பட்டதால் கொள்ளை யடிக்க திட்டமிட்டோம். இதற்காக யூடியூப்களில் பல கிரைம் திரைப்படங்களில் வரும் திருட்டு, கொள்ளை காட்சிகளை பார்த் தோம். அதன்படி பகல் நேரங்களில் புத்தகம் மற்றும் இயற்கை மருந்து விற்பது போல் முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகளை ஒருவாரம் நோட்டமிடுவோம். அதன்பின்னர் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து கைவரிசை காட்டுவோம்.
மேலும் நாங்கள் செல்லும் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டையும் அடிக்கடி மாற்றி விடுவோம். ஆனாலும் போலீசில் மாட்டிக்கொண்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.
கைதான காதல் ஜோடியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.