Normal
வால்பாறை பழைய பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை பராமரிப்பு

வால்பாறை பழைய பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை பராமரிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனிஅறை அமைக்கப்பட்டது. அந்த அறை ஒருசில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதையடுத்து அந்த அறை திடீரென்று பூட்டப்பட்டது.
தற்போது தமிழக அரசின் சுகாதார துறை மூலம் வால்பாறை பழைய பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இனிவரும் நாட்களில் பஸ் நிலையத்திற்கு உள்ள அறையை பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






