சேவல் சூதாட்டம்; 2 வாலிபர்கள் சிக்கினர்
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்.
கோயம்புத்தூர்
நெகமம்
நெகமம் அடுத்த மஞ்சம்பாளையத்தில் சேவல் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அங்கு சேவல் மற்றும் பணம் வைத்து 2 பேர் சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், மன்றாம்பாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 34), கொண்டேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த உதயகுமார் (22) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல் மற்றும் ரூ.13,400 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story