பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது


பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது
x

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது.

இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும். அதன்படி, நாளை (திங்கட்கிழமை) பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயிலை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம். இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story