அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல ரோப்கார் வசதி


அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல ரோப்கார் வசதி
x
தினத்தந்தி 10 Aug 2023 4:45 AM IST (Updated: 10 Aug 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்ல ரோப்கார் வசதி, வனத்துறை அனுமதி கிடைத்ததும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்


துடியலூர்


கோவை அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்ல ரோப்கார் வசதி, வனத்துறை அனுமதி கிடைத்ததும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்


கோவை மாவட்டத்தில் மலை மீது உள்ள முருகன் கோவில்களில் ஒன்று அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விழா, தைப்பூச விழா ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த கோவில் உள்ளத. கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் அடிவாரத்தில் 500 படிகள் ஏறி தான் கோவிலுக்கு செல்ல முடியும்.


500 படிகள் ஏறி செல்ல வேண்டி இருப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.


ரோப்கார் வசதி


எனவே பழனி தண்டாயுதபாணி கோவிலில் இருப்பது போல் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.


பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அனுவாவி கோவிலில் ரோப்கார் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதைத்தொடர்ந்து முதலில் அந்த மலையில் ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அரசு துறை என்ஜினீயர்கள் குழுவினர் கோவிலுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.


பின்னர் அவர்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் அனுவாவி கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.


வனத்துறை அனுமதி


இதனால் பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினரின் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் வனத்துறையினரின் அனுமதியும் கிடைத்து விடும் என கூறப்படுகிறது. அதன்பிறகு ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் முறைப்படி தொடங்கப்பட உள்ளது.



Next Story