பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 2 நாட்கள் நிறுத்தம்


பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 2 நாட்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 April 2023 9:00 PM GMT (Updated: 24 April 2023 9:00 PM GMT)

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதில் மலைக்கோவிலுக்கு சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், சுற்றுலா அனுபவத்தையும் கொடுப்பதால் பெரும்பாலான பக்தர்களின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் ரோப்கார் மூலம் அதிகமாக செல்கின்றனர்.

இந்த ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் பாதுகாப்புக்காக மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறும். அதன்படி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்கள் பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம். இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story