ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூட்டம்
அரக்கோணத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் கே.சதீஷ், ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயன்முறை மருத்துவம் மற்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர். வி.கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பரிசுகளை வழங்கி உடலில் ஏற்படும் வெவ்வேறு நிலைகளின் ஆரோக்கிய மாற்றத்திற்கு உணவு முறை, யோகா மற்றும் தியானம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் முருகன் பார்மசி வெங்கடரமணன், டி.எஸ்.ரவிகுமார், சங்க ஆலோசகர்கள் ஜி.மணி, சந்துரு, கே.பி.கே.பிரபாகரன், செந்தில்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story