அழுகி கிடக்கும் பூசணிக்காய்கள்


அழுகி கிடக்கும் பூசணிக்காய்கள்
x

அழுகி கிடக்கும் பூசணிக்காய்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

கடந்த 23-ந் தேதி நடைபெற்ற ஆயுத பூஜையையொட்டி அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு விற்பனைக்காக ஏராளமான பூசணிக்காய்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் விற்காத பூசணிக்காய்களை வியாபாரிகள் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். தற்போது அந்த பூசணிக்காய்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story