திருப்பூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
திருப்பூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
நல்லூர்
திருப்பூரில் யார் பெரியவன்? என்ற தகராறில் பிரபல ரவுடி கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். முதல் முறை உயிர் தப்பிய நிலையில் அவர் 2-வது முறை சிக்கினார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் ெதாடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிரபல ரவுடி கொலை
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற ஆட்டோ தினேஷ் (வயது 28) பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவர் கடந்த சில நாட்களாக பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செரங்காடு காட்டுப்பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் தினேஷ் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் நல்லூர் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷின் நண்பர்கள் திருப்பூர் பாளையக்காட்டை சேர்ந்த பாலாஜி சரவணன் (28), மணிகண்டன்( 28), தமிழரசன்( 25), கண்ணன்( 25), மற்றொரு தினேஷ் (30), பாலகிருஷ்ணன் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
பரபரப்பு வாக்குமூலம்
தினேஷ் மீது 15 வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கு சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கில் தொடர்புடைய தினேசின் நண்பர் ஒருவரும் ஆஜர்ஆனார். விசாரணை முடிந்து பின்னர் தினேஷ் மற்றும் இவரின் நண்பர்கள் பாலாஜி சரவணன், மணிகண்டன், தமிழரசன், கண்ணன், மற்றொரு தினேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் உள்பட 12 பேர் செரங்காடு காட்டுப்பகுதிக்கு மது அருந்த சென்றனர். அப்போது அவர்களுக்குள் யார் பெரியவன் என்ற விவாதம் எழுந்தது. இந்த குழுவில் உள்ள முக்கிய நபர் ஒருவரை கொலை செய்தால்தான் நாம் பெரிய ரவுடியாக வரமுடியும் என்று தினேஷ் கூறியதாக ெதரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் தினேசை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று உள்ளது. 12 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேரை தனிப்படை போலீசார்தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட தினேஷ் மீது ஏற்கனவே ஒருமுறை கொலை முயற்சி நடந்துள்ளது. அப்போது அவர் உயிர் தப்பி விட்டார். தற்போது 2-வது முறை கொலையாளிகளின் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. திருப்பூரில் பிரபல ரவுடி அவருடைய நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-