குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
பண்ருட்டியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி
பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பம் அடுத்த பேர்பெரியான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் அசோக்குமார் (வயது 24). இவர் திருட்டு வழக்கில் முத்தாண்டிக்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல ரவுடியான இவர் மீது திருட்டு, தீண்டாமை வன்கொடுமை, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம், அசோக் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அசோக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.