புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டார்.
கரூர் ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆசைத்தம்பி (வயது 40), காந்திகிராமத்தில் ஒரு கடையில் சீனிவாசன் (43), வாங்கல் எல்லை மேடு பகுதியில் உள்ள கடையில் பழனியப்பன் (60), சின்னகுளத்து பாளையம் பகுதியில் உள்ள டீக்கடையில் மதனகோபால் (40), தூளிபட்டி பகுதியில் உள்ள கடையில் லோகநாதன்( 65) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் வெங்கமேடு மற்றும் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இதேபோல் குளித்தலை அருகே உள்ள வடக்குப்புதூர் பகுதியில் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (39) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தென்னிலை அருகே கோடந்தூரில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக தங்கவேல் (62) என்பவரை தென்னிலை போலீசார் கைது செய்தனர்.மேலும் தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்றதாக மணி என்பவர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.