கடலூரில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.1 கோடி முறைகேடு - 2 பேர் பணியிடை நீக்கம்
கடலூரில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட குடிசை மாற்று வாரிய என்ஜினீயர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 188 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டும் திட்டத்தில் ஒரு கோடிக்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றது.
அதன் பேரில் கடலூர் ஊழல் தடுப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் எட்வின் சாம், உதவி பொறியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து எட்வின் சாம், ஜெயக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சென்னை குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர் கோவிந்தராவு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story