மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு
மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1¾ லட்சம் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியை அடுத்த தெற்கு அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சித்துரை (வயது 45). விவசாயியான இவர் நேற்று சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் வங்கியில் ரூ.1¾ லட்சத்தை வாங்கிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் பஸ் நிலையம் அருகே ேமாட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1¾ லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story