பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதுபானங்கள் அழிப்பு


பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதுபானங்கள் அழிப்பு
x

கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதுபானங்களை போலீசார் அழித்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்கள், பாக்கெட்டுகளை அழிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் மதுபாட்டில்கள், பாக்கெட்டுகளை கீழே கொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று போலீசார் அழித்தனர். அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் பங்கஜம், கமலேசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-

வங்கி கணக்கு முடக்கம்

கர்நாடக மாநிலத்தில் இரந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்துவதை தடுத்து வருகிறோம். இதில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன. வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 44 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 2 மாதத்தில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேரின் வங்கி கணக்குகள் காவல்துறை மூலம் முடக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story