லாரி டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி


லாரி டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x

போலி வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் லாரி டிரைவரிடம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

தர்மபுரி:

லாரி டிரைவர்

தர்மபுரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 23), லாரி டிரைவர். இவருடைய வங்கி கணக்கு பாப்பாரப்பட்டியில் ஒரு வங்கி கிளையில் உள்ளது. இவர் பெற்ற கடன் தொகையை செல்போன் இணையதள சேவை மூலம் செலுத்த முயன்றார். அதில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது வாடிக்கையாளர் சேவை மையம் எனக்கூறி ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கடனை செலுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பண மோசடி

இதை நம்பி அந்த செயலியை மூர்த்தி பதிவிறக்கம் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 210 தொகையை மர்ம நபர்கள் எடுத்து விட்டனர். போலியான வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் இந்த மோசடி நடந்திருப்பது அப்போது மூர்த்திக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.


Next Story