வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10½ லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10½ லட்சம் மோசடி:  4 பேர் மீது வழக்கு
x

புகழூர் காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10½ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

பணம் வாங்கி மோசடி

கரூர் மாவட்டம், புகழூர் அருகே உள்ள நாணப்பரப்பு ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாபர் உசேன். இவரது மகன் முகமது அராபத் (வயது 27). இவரிடம், புகழூர் காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடமிருந்து ரூ.10 லட்சத்து 42 ஆயிரத்தை புன்னம் சத்திரம் ஆர்.ஜி.நகர் பகுதியை சேர்ந்த தம்பதி தங்கவேல்-மீனாட்சி, இவர்களது மகன் தினேஷ், மகள் சிந்துஜா ஆகியோர் வாங்கி உள்ளனர்.

இதையடுத்து முகமது அராபத்துக்கு வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து அவர் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கவில்லையாம். இதனால் 4 பேரும் ரூ.10 லட்சத்து 42 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து முகமது அராபத் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

அதன் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி வாங்கிய பணத்தைதிருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக தங்கவேல், மீனாட்சி, தினேஷ், சிந்துஜா ஆகியோர் மீது வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story