சேலத்தில் ஆன்லைன் மூலம் ஐஸ்கிரீம் எந்திரம் விற்பனை செய்வதாக ரூ.10 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்


சேலத்தில் ஆன்லைன் மூலம்  ஐஸ்கிரீம் எந்திரம் விற்பனை செய்வதாக ரூ.10 ஆயிரம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
x

சேலத்தில் ஆன்லைன் மூலம் ஐஸ்கிரீம் எந்திரம் விற்பனை செய்வதாக ரூ.10 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. அதனை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

சேலம்

சேலம்,

சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்குமார். இவர், கடந்த மாதம் 27-ந் தேதி மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் மனுவை அளித்தார். அதில், இந்தியா மார்ட் என்ற இணையதளத்தின் மூலமாக புதிதாக ஐஸ்கிரீம் தயாரிக்கும் எந்திரம் ஆர்டர் செய்வதற்கு தேடியபோது, அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த எந்திரம் ரூ.52 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் என்னிடம் பேசிய நபர், தெரிவித்த வங்கி கணக்கிற்கு முன்பணமாக ரூ.10 ஆயிரம் ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தேன். ஆனால் ஐஸ்கிரீம் எந்திரம் அனுப்பாமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே, தனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி கணக்கிற்கு அந்த பணம் சென்றிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார், சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு பேசி, சந்தோஷ்குமார் இழந்த ரூ.10 ஆயிரத்தை மீட்டு திருப்பி அவரது கணக்கில் சேர்த்தனர்.


Next Story