பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.12¾ கோடி உதவி


பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.12¾ கோடி உதவி
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 64 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.12¾ கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 64 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.12¾ கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

காணொலி காட்சி

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடிக்கும் அதிகமான நிதியை மின்னணு முறையில் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி காணொலிகாட்சி மூலம் நடத்தினார். அதனை தொடர்ந்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

ரூ.12¾ கோடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 64 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ.12 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நிதி மின்னணு முறையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் பல்வேறு முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வங்கிகளில் மத்திய மற்றும் மாநில அரசின் சார்பாக பல்வேறு கடன் உதவி திட்டங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசின் சார்பில் பல்வேறு நல திட்டங்கள் மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் சார்பில் குறைந்தபட்சமாக பிற மாநிலங்களில் மாதம் ரூ.500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் சார்பில் ரூ.500, மாநில அரசின் சார்பில் ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஷ்வரி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி, விஜயா, வெண்மதி, சத்யா, சங்கீதா, சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story