ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.13 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.13 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 1 Jun 2022 6:32 PM GMT (Updated: 2022-06-02T00:56:22+05:30)

ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 57 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் சமூக பாதுகாப்புத் திட்ட உதவி தொகையும், 51 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரம், 5 பயனாளிகளுக்கு சலவை பெட்டி உள்பட 152 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், நகர்மன்றத் தலைவர் ஹரிணி தில்லை, தாசில்தார் ஆனந்தன், சமூக பாதுகாப்பு தாசில்தார் பாக்கியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story