அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி; தம்பதி உள்பட 4 பேர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி; தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி சபரிநகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி ஜாய்லின் பாலா (வயது 40). இவர்களது மகன் ஜெயின் ஜோஸ் பாலிடெக்னிக் படித்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி வசந்தி, ஜாய்லின் பாலாவிடம் தனது கணவர் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், அதேபோல் ஜெயின் ஜோசுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார். அதை நம்பி ஜாய்லின் பாலா சிறிது சிறிதாக ரூ.14 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்காததால், ஜாய்லின் பாலா தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு வசந்தியிடம் கேட்டு உள்ளார். அதற்கு வசந்தியின் கணவர் சக்திவேல் (44), அவரது சகோதரர் லட்சுமணன் (46), துரைச்சாமியாபுரம் சுப்பிரமணியன் மகன் முருகன் (37) ஆகியோர் பணத்தை திருப்பித்தர முடியாது என்று கூறி ஜாய்லின் பாலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜாய்லின் பாலா கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சக்திவேல், வசந்தி, லட்சுமணன், முருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.


Next Story