வியாபாரியிடம் ரூ.2¾ லட்சம் மோசடி


வியாபாரியிடம் ரூ.2¾ லட்சம் மோசடி
x

வியாபாரியிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 52). இவர் வீடு கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ஜாகிர் உசேன் கோட்டார் போலீசில் புகார் மனு அளித்தார்.

அதில், எனது வியாபாரம் மூலம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த சாமுவேல் என்பவர் பழக்கமானார். அவர் என்னிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், இதற்காக ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் செலவாகும் என கூறினார். அவரது பேச்சை நம்பி நானும் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை கொடுத்தேன். ஆனால் இன்றளவிலும் எனக்கு வேலை வாங்கி தரவில்லை. பின்னர் என்னிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது.

இந்த மோசடி விவகாரத்தில் சாமுவேல் மனைவி மேரி புஷ்பா ரோஸ் மற்றும் மகன் பெபின் ஷாம் ஆகியோரும் உடந்தையாகும். எனவே என்னிடம் பணமோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சாமுவேல் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story