ஒண்டிப்புதூரில் வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை, பணம் திருட்டு
ஒண்டிப்புதூரில் வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை, பணம் திருட்டு
கோயம்புத்தூர்
ஒண்டிப்புதூர்
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சரோஜினி (வயது 60). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டு மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்து இறங்கி ரூ.2¼ லட்சம் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரோஜினி இது குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story