குறைந்த விலைக்கு கிரானைட் கற்கள் விற்பனை செய்வதாக ரூ.3 லட்சம் மோசடி


குறைந்த விலைக்கு கிரானைட் கற்கள் விற்பனை செய்வதாக ரூ.3 லட்சம் மோசடி
x

குறைந்த விலைக்கு கிரானைட் கற்கள் விற்பனை செய்வதாக கூறி ஆன்லைனில் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்

குறைந்த விலைக்கு கிரானைட் கற்கள் விற்பனை செய்வதாக கூறி ஆன்லைனில் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிரானைட் கற்கள் விற்பனை

வேலூரை அடுத்த நாயக்கனேரியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவர் அடுக்கம்பாறை அருகே உள்ள கட்டுப்புடி கூட்ரோட்டில் கிரானைட் கற்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடைய செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைந்த விலையில் கிரானைட் கற்கள் விற்பனை செய்வதாக பதிவு ஒன்று வந்தது. இதையடுத்து ராஜேஷ், அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது எதிர்புறம் பேசிய மர்மநபர்கள், ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் உள்ள கிரானைட் குவாரியில் இருந்து பேசுவதாகவும், கிரானைட் கற்கள் ரகங்களின் அடிப்படையில் குறைந்த விலைக்கு தருவதாகவும், அதற்கு முன்பணம் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

ரூ.3 லட்சம் மோசடி

இதனை நம்பிய ராஜேஷ் இதுபற்றி காகிதப்பட்டறையை சேர்ந்த கிரானைட் கற்கள் விற்பனை செய்யும் அவருடைய நண்பர் முரளியிடம் கூறினார். இதையடுத்து அவரும் கிரானைட் கற்கள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து இருவரும், மர்மநபர்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு ஆன்லைன் மூலம் தலா ரூ.1½ லட்சம் என்று ரூ.3 லட்சம் அனுப்பி உள்ளனர்.

கிரானைட் கற்கள் நீண்ட நாட்களாகியும் வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த இருவரும், மர்மநபர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அதையடுத்து அந்த கிரானைட் குவாரியின் எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது மர்மநபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், முரளி ஆகியோர் தனித்தனியாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story