ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30¾ லட்சம் மோசடி


ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30¾ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30¾ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராணுவத்தில் வேலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அழகர் ராஜா (வயது 30). இவர் ராணுவத்தில் வேலைக்கு சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அழகர் ராஜாவுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் அறிமுகமானார்.

அவர் உள்பட 5 பேர் தங்களுக்கு அரசு துறையில் அதிகாரிக ளின் பழக்கம் உள்ளது. அவர்களிடம் பேசி உங்களுக்கு ராணுவத் தில் உயர் பதவி வாங்கி தர முடியும் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர். அதற்கு பணம் செலவாகும் என கூறி உள்ளனர்.

அதை உண்மை என நம்பிய அழகர் ராஜா அவர்களுக்கு பணம் கொடுக்க முன் வந்தார். மேலும் தனது பகுதியை சேர்ந்த அபனாஷ், சத்தியசீலன், தாமோதரன் ஆகியோருக்கும் ராணுவத்தில் வேலை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் பல கட்டங்களாக ரூ.30 லட்சத்து 85 ஆயிரத்தை மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட 5 பேரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

5 பேர் மீது வழக்கு

ஆனால் பணத்தை வாங்கிய பிறகு அவர்கள் ராணுவத்தில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வர்கள் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30.85 லட்சம் மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த மதுமோகன், அவரது மனைவி சுஜாதா, மனோஜ் பிரபாகர், ரவி, மற்றும் ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story