ராணுவ கேண்டீன் தீ விபத்தில் ரூ.35 லட்சம் பொருட்கள் சேதம்; போலீசார் வழக்குப்பதிவு


ராணுவ கேண்டீன் தீ விபத்தில் ரூ.35 லட்சம் பொருட்கள் சேதம்; போலீசார் வழக்குப்பதிவு
x

ராணுவ கேண்டீன் தீ விபத்தில் ரூ.35 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே ராணுவ கேண்டீன் (பல்பொருள் அங்காடி) அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு அறையில் கடந்த 18-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கிருந்த மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், ஏசி எந்திரங்கள் என ரூ.35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கேண்டீன் பொறுப்பாளர் ராமன் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.


Next Story