கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.3.84 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு


கள்ளக்குறிச்சி நகராட்சியில்  ரூ.3.84 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்  கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
x

கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.3 கோடியே 84 லட்சம் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

வளர்ச்சி திட்டப்பணிகள்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஏமப்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 48 லட்சம் செலவில் மின்தகனமேடை கட்டும் பணி, ரூ.1 கோடியே 21 லட்சம் செலவில் ஏமப்பேர் குளத்தில் புதிய மதகு மற்றும் நீர் வெளியேற்றும் வாய்க்கால், பூங்கா அமைத்தல் போன்ற வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிட கட்டுமான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆய்வு

இந்த வளர்ச்சி திட்ட பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என நகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story