விமானத்தில் கடத்தி வந்த ரூ.4 கோடி நகை பறிமுதல்


விமானத்தில் கடத்தி வந்த ரூ.4 கோடி நகை பறிமுதல்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி நகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 20 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

பீளமேடு

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி நகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 20 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகாரிகள் கண்காணிப்பு

கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு உள்பட வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானங்க ளில் வரும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகிறார்களா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

20 பயணிகளிடம் சோதனை

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் என்ற விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சில பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த 20 பயணிகளை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு நகையை அணிந்து கடத்தி வந்தது தெரியவந்தது. சிலர் ஆடைகளுக்குள் தங்க நகையை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.

ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்

இது பற்றி அதிகாரிகள் அந்த 20 பயணிகளிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள், நாங்கள் எங்கள் தேவைக்காக வாங்கிய நகைக ளை தான் அணிந்து வருகிறோம். கடத்தி வரவில்லை என்று கூறினார்கள்.

உடனே அதற்கான ஆவணங்களை காட்டுமாறு அதிகாரிகள் கேட்டனர்.

ஆனால் அவர்கள் ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. உடனே அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 7½ கிலோ தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 11 லட்சம் ஆகும். இதனால் அந்த 20 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அபராதம்

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, 20 பயணிகளும் அதிக அளவு நகையை கொண்டு வந்தனர். ஆனால் அதற்குரிய ஆவ ணங்கள் அவர்களிடம் இல்லை. உரிய ஆவணங்களை சமர்ப்பித் தால் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவு நகைகளை கொண்டு வந்ததற்கு அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றனர்.


Next Story