நெல்லையில் டிராக்டர் வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி- 2 பேர் மீது வழக்குப்பதிவு


நெல்லையில் டிராக்டர் வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி- 2 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 Dec 2022 1:09 AM IST (Updated: 9 Dec 2022 9:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் டிராக்டர் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் டிராக்டர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர், சேரன்மாதேவி வேளாண்மை தோட்டக்கலை துறை மூலம் டிராக்டர் வாங்குவதற்காக அந்த துறை ஊழியர் பேச்சிமுத்து என்பவரை அணுகினார். அவர் துறை மூலம் மானிய விலையில் டிராக்டர் வாங்கி தருவதாக கூறினார்.

இதற்காக முத்துராமன் ரூ.4 லட்சத்தை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு டிராக்டர் விற்பனை நிலையத்தில் செலுத்தினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு டிராக்டர் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் சரியான பதில் அளிக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை.

இதுகுறித்து முத்துராமன் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் விசாரணை நடத்தி, டிராக்டர் விற்பனை நிறுவன உரிமையாளர் கோபுநாதன் மற்றும் தோட்டக்கலைத்துறை ஊழியர் பேச்சிமுத்து ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story