தி.மு.க. பைல்ஸ் 2 : இரும்பு பெட்டியில் ரூ.5600 கோடி முறைகேடு ஆவணங்களுடன் கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு
ரூ. 5, 600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை கவர்னரிடம் வழங்கியுள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார்.இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் ,
பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் இணைந்து இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தி.மு.க. அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள்,எம்.பிகள் மற்றும் குடும்பம் செய்த ரூ.5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் தொடர்பான பினாமி ஆவணங்கள் அடங்கிய ஆவணங்களுடன் தி.மு.க. பைல்ஸ் 2 குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை அளித்து உள்ளோம் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story