நகைக்கடைக்காரரிடம் ரூ.5 கோடி மோசடி; 8 பேர் கைது


நகைக்கடைக்காரரிடம்  ரூ.5 கோடி மோசடி; 8 பேர் கைது
x

நகைக்கடைக்காரரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 41). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம், செல்லூர் பகுதியை சேர்ந்த தீபா (28), தீபிகா (30), அன்னலட்சுமி (49), துர்கா தேவி (39), தங்க முனீஸ்வரன் (36), ஜெயபிரபா, கிருஷ்ணமூர்த்தி (36), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகிய 8 பேரும், ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர். மேலும், நகைக்கான பணத்தை அவர்கள் கொடுக்காமல் காலம்தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராம்குமார் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் நகைக்கான பணத்தை திருப்பி தர மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ராம்குமார், விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் 8 பேரும், நகையை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 8 பேரையும் விளக்குத்தூண் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story