ரூ.5 லட்சம் மோசடி


ரூ.5 லட்சம் மோசடி
x

பாளையங்கோட்டையில் ஆசிரியர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். ஆனால் ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை. அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக ஆசிரியரிடம் கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கினார். இதை நம்பிய அவர் ஏ.டி.எம். கார்டை அந்த நபரிடம் கொடுத்து ரகசிய எண்ணையும் தெரிவித்தார். அப்போது அந்த வாலிபர், ஆசிரியரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் ரூ.5 லட்சத்திற்கு மேல் எடுத்து கொண்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் பார்த்தபோது ரூ.5 லட்சம் மோசடி செய்ததை அறிந்த ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் புகார் மனு கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story