துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

துபாய் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"துபாய் அடுக்குமாடி வளாகத்தில் நேற்று முன்நாள் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக் ஆகிய இரு தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக் ஆகிய இரு தமிழர்களின் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக துபாய் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story