அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி: போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது


அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி: போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
x

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி: போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் குமரய்யா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு குமரி மாவட்டம் சூசைபுரம் காக்கவிளை பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகனுக்கு, முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அவர்களது செயலாளர்கள் ஆகியோரிடத்தில் நேரடியாக பேசி ஆவின் நிறுவனத்தில் என்ஜினீயர் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.31 லட்சம் வரை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல அரசு வேலை வாங்கி தருவதாக மேலும் சிலரிடமும் ரூ.20 லட்சம் வாங்கி மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் புகார் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குமரய்யா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நேற்று இன்ஸ்பெக்டர் குமரய்யாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

1 More update

Next Story