40 பேர்களிடம் ரூ.70 லட்சம் மோசடி: தலைமறைவான குற்றவாளி சிக்கினார்


40 பேர்களிடம் ரூ.70 லட்சம் மோசடி: தலைமறைவான குற்றவாளி சிக்கினார்
x

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 40 பேர்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்து தலைமறைவான குற்றவாளி சிக்கினார்.

சென்னை

சென்னை போரூர், கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீ (வயது 54). இவர் மீது மன்னார்குடியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், அரசு அனுமதி எதுவும் பெறாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி, 40 பேர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ரூ.70 லட்சம் வசூலித்து, வேலை எதுவும் வாங்கி கொடுக்காமல் முகமது ரபீ மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையொட்டி தலைமறைவாகி விட்ட முகமது ரபீ கைது செய்யப்பட்டார்.


Next Story