ஏ.டி.எம்.மில் கிடந்த ரூ.7 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

குரும்பபாளையம் பகுதியில் ஏ.டி.எம்.மில் கிடந்த ரூ.7 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு வாலிபர்களுக்கு போலீசார் பாராட்டு
கோயம்புத்தூர்
சரவணம்பட்டி
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வரதய்யங்கார்பாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 26).
லட்சுமி கார்டனை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30).
இவர்கள் 2 பேரும் குரும்பபாளையம் பகுதியில் உள்ள பெட் ரோல் விற்பனை நிலைய வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முன்பு பணம் எடுக்க வந்த யாரோ ஒருவர், ரூ.7 ஆயிரம் பணத்தை எடுக்காமல் ஏ.டி.எம். எந்திரத்திலேயே விட்டுச் சென்றது தெரிய வந்தது. அதை பார்த்த பார்த்திபன், சதீஷ்குமார் ஆகியோர் பணத்தை எடுத்து கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களுக்கு கோவில்பாளையம் போலீசார் பாராட்டு தெரிவித்தனர். ஏ.டி.எம். மில் கிடந்த பணத்தை உரிய நபரிடம் அல்லது வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story






